ஊருக்குள் புகுந்த பத்தடி நீள பாம்பு,,!
திருவள்ளூர் மாவட்டம் கேஜி கண்டிகையில் நள்ளிரவில் ஊருக்குள் வந்த மலைப்பாம்பை தைரியமாக பிடித்த இளைஞர்கள் பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கேஜி கண்டிகையில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த பத்தடி நீளம் பாம்பை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். மூன்று இளைஞர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மூன்று மணி நேரம் கழித்து வந்த வனத்துறையினரிடம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர், பின்னர் மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.





