டிவியை சத்தமாக வைத்த இளைஞர்..கண்ணை மறைத்த போதை.. இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை..!
கோவையில் டிவியை சத்தமாக வைத்ததால் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காலனி பகுதியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பவர் இன்று மாலை அசோக் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.
அப்பொழுது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்திய கோகுல கிருஷ்ணனுக்கும் அங்குள்ள சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டிவியை சத்தமாக வைத்தது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் பின்னர் தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.
பின்னர் ஆத்திரமடைந்த உறவினர்கள் கோகுல கிருஷ்ணனை ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். தகவலறிந்து வந்த போலீசார் கோகுலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றிய நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய பிரவீன், சந்துரு, சூர்யா, நாகராஜ், சஞ்சய் ஆகிய ஐந்து பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





