--- --:--:-- --

நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்..!

7

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார்.

 

இவரது வீட்டின் கீழ் பகுதியில் மின் கசிவு காரணமாக தீ விபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பிரேம்குமார் அவர்கள் மனைவி மஞ்சுளா, இரண்டு குழந்தைகளில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

 

காயம் அடைந்தவர்களை மீட்ட அந்த பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தான். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon