பிளஸ் டூ படித்துவிட்டு போலி மருத்துவம் பார்த்தவர் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பாக்கம் பகுதியில் எஸ்.எம்.காவிரி மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வந்தது. இங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதாரத் துறையினர் மருத்துவர் மாரிமுத்துவின் சான்றிதழ்களை பரிசோதித்தனர்.
அப்பொழுது 12ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளது தெரிய வந்தது. பிறகு செவிலியர் பாத்திமாவின் சான்றிதழ்களை பரிசோதித்தனார். அவரிடமும் முறையான சான்றிதழ்கள் இல்லை இதனை எடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.





