--- --:--:-- --

தனியாக வசித்த பாட்டியை கொன்ற பேரன்..!

6

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிக பணம் சேமித்து கணக்கு வைத்து வரும் பாட்டி செலவுக்கு பணம் தராததால் ஆத்திரத்தில் பங்காளி உறவு பேரன் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

கடந்த மூன்றாம் தேதி விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது பாட்டி புண்ணியம்மாள் காணாமல் போனதாக தாரமங்கலத்தில் வசித்து வரும் மகள் வழி பேரன் புகார் அளித்திருந்தார்.

 

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பங்காளி உறவு முறை பேரன் சித்துராஜ், நண்பர்கள் தனுஷ், முத்துராஜ் உடன் இணைந்து பாட்டியை கொலை செய்து காவிரி ஆற்றல் வீசியதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து மூவரையும் கைது செய்தனர்.

 

Right Menu Icon