திருப்பூரில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழச்சி..!
முதலமைச்சர், பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழச்சி திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லாத பேருந்து பயணம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கட்டணமில்லாத பேருந்து பயண அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், முதலமைச்சர் நம்ம பள்ளி என்கின்ற ஒரு திட்டத்தை துவக்கி வைத்து பொது நல ஆர்வலர்களை கொண்டு பள்ளிக்கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள். குடிநீர் வசதிகள் தேவையான வகையிலே பல்வேறு உதவிகளை செய்யக்கூடிய வகையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதால், பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல.
சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. பள்ளிக்கு வந்த பின் உணவு அருந்தி விட்டு கல்வியை கற்கும் மாணவர்களுக்கு தெளிவான கல்வியை கொடுக்க முடியும். தாய்க்கும் பணிசுமை குறையும், இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வைத்தார். தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
புதுமைப்பெண் என்கின்ற திட்டத்தை துவக்கி வைத்து அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பிற்காக மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் திட்டதினை முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மேம்பாட்டுக்கழகம் என்கின்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக மாணவர்களின் பெற்றோர்களை உறுப்பினர்கள் ஆக்கி அதன் மூலம் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளியில் சமூக சீர்கேடுகள் நடந்து விடக்கூடாது என்ற அடிப்படையில் சிற்பி என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் காவல்துறை அதிகாரிகளும், பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்குச் சென்று மாணவர்களை சமூக ரீதியாக ஒழுங்குபடுத்தப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு ரூ.32,53,460 மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், காங்கேயம் நகர்மன்றத்தலைவர் சூரியபிரகாஷ், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்குமார். மாவட்டக்கல்வி அலுவலர் பக்தவச்சலம், கார்மெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியை அருட்சகோ, குழந்தை தெரசா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.





