--- --:--:-- --

குரங்கு அம்மை நோய்..உலக சுகாதார அமைப்பு விளக்கம்..!

2

ப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

 

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என்றும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரியும் என்றும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், நாம் ஒன்றாக இணைந்து இந்த குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும் என்றும், நாம் சமாளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

குரங்கு அம்மை நோயின் புதிய கிளேட் 1 வகை நோய் மீது அதிக கவனம் செலுத்துவதால், குறைந்த தீவிரம் கொண்ட கிளேட் 2 வகை மீதும் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன்மூலம் ஐரோப்பாவில் சிறந்த பொது சுகாதார ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்பையும் வழங்க முடிவதாகவும் ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon