--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை..குற்றவாளியை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு..!

7

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 11 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருக்கும் சுதாகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் என் சி சி பெயரை தவறாக பயன்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தது தெரிய வந்தது.

 

இவ்வாறு ncc மாணவர்களிடம் இருந்து பல்லாயிரம் கணக்கில் பணம் வசூல் செய்து மோசடி செய்ததும் தெரிய வந்திருக்கிறது. சிவராமனனின் தொடங்கி பர்கூர் கந்திகுப்பத்தில் இயங்கி வரும் முதல்வர் தாளாளர் என இதுவரை 11 பேரை கைது செய்திருக்கும் போலீசார் வழக்கில் தலைமறைவாக உள்ள சுதாகர் என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

 

மேலும் கைதின் போது தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் காலை உடைத்துக் கொண்ட சிவராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon