ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை..!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்படும் குற்றவாளி குறித்து இயக்குனர் நெல்சன் மனைவியிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாத ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க காவலர்கள் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 20-க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்துள்ளனர். தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டாளி குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றுள்ளார். கிருஷ்ணனுடன் செல்போனில் தொடர்பில் இருந்ததாக கூறி இயக்குனர் நெல்சன் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





