மகனை கொல்ல வந்த பொழுது எதிர்த்து நின்ற தாய்..!
மகாராஷ்டிராவில் மகனை தாக்க வந்தவரிடம் இருந்து தனது மகனை மன உறுதியுடன் தாய் காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலக்பூரில் சாலையோரம் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு இளைஞர் ஒருவர் தனது தாயுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஸ்கூட்டரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளைஞரை அரிவாளால் வெட்ட முயன்ற கண நேரத்தில் சுதாரித்த அந்த இளைஞரும் தாக்குதலிலிருந்து தப்பினார்.
இதை சற்றும் எதிர்பாராத அவரது தாய் கீழே கிடந்த கற்களை எடுத்து அவர்கள் மீது வீசி எறிந்தார். அவரது மகனும் சேர்ந்து கற்களை எடுத்து மூன்று பேர் மீதும் வீசினார். இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





