--- --:--:-- --

கேரள திரையுலகில் பாலியல் அத்துமீறல்..வெளிவந்த உண்மை..!

5

கேரளத்துறை உலகில் முன்னணியில் இருப்பவர்கள் நடிகைகளிடம் அத்துமீறல் ஈடுபடுவதாக நீதிபதி குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைகள் உட்பட பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தி 2019 ஆம் ஆண்டு கேரள முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கை தகவல் உரிமை ஆணையம் தலையிட்டதன் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதில் பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கட்டாயப்படுத்தவதாக கூறப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தி பட வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகள் பிரச்சினைக்குரியவர்கள் என முத்திரை குத்தப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பாதிப்பு ஏற்படும் என்று அச்சத்தால் நடிகைகள் போலீசில் புகார் அளிக்க முன் வருவதில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon