மஞ்சள் வேட்டி மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருக்கும் புஸ்ஸி ஆனந்த்..!
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அறிமுக விழாவிற்காக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் வேட்டி மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருந்து வருகிறார். கட்சி கொடியை ஏற்றுவது தொடர்பான ஒத்திகைக்கு முன்பாக கொடிக்கு பூஜை செய்யப்பட்டு இருக்கிறது.
ஒத்திகை முடிந்ததும் அங்கிருந்தவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெற இருக்கும் வேலையில் விஜய் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடியை அலுவலகத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்த காட்சி வெளியாகியிருக்கிறது.
வரும் வியாழக்கிழமை விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி அறிமுகம் விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 30 அடி உயர கொடி கம்பத்தில் விஜய் கொடியேற்றவிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





