--- --:--:-- --

வயநாட்டில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டு..!

3

வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட தமிழகம், கேரளா அவசர ஊர்திகளின் ஓட்டுனர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசு, கேடயங்கள் வழங்கப்பட்டன.

 

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை கூடலூரைச் சேர்ந்த மூன்று ஆம்புலன்ஸ்கள் கேரளாவை சேர்ந்த ஐந்து ஆம்புலன்ஸ்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நாட்கள் உணவு குடிநீர் இன்றி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலரை காப்பாற்றி உள்ளனர்.

 

அவர்களை கௌரவிக்கும் வகையில் கூடலூரில் பாராட்டு விழா நடைபெற்றது. கூடலூர் எம்எல்ஏ ஜெயசீலன், காவல்துறை கண்காணிப்பாளர் வசந்த் ஆகியோர் கூடலூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மூன்று பேருக்கும் கேரளா ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கும் பரிசுகள் கேடயங்களை வழங்கி பாராட்டினர்.

 

அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மீட்பு பணி குறித்து பேசி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இது போன்ற பேரழிவு இனி வரக்கூடாது என்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon