சாலையின் நடுவே நான்காவது பள்ளம்..!
ஸ்ரீரங்கத்தில் சாலைக்கு நடுவே பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலை ரயில்வே மேம்பாலம் திறக்கும் முன் ஏற்கனவே பள்ளம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் வந்து சாலையில் சிறிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் சாலையின் கீழே பதிக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் பழுதடைந்த காரணத்தினால் சாலையில் பள்ளம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நான்காவது முறையாக ஏற்பட்ட பள்ளத்தின் காரணமாக அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





