கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கொலை செய்த நபர்..!
சென்னை வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியிடம் கஞ்சா போதையில் தவறாக நடக்க முயன்று அவரை கட்டையால் அடித்துக் கொன்ற ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார்.
மீனா என்ற அந்த மூதாட்டியின் வீடு இரண்டு நாட்களாக பூட்டி கிடப்பதாக கிடைத்த தகவலின் படி போலீசார் சென்று பார்த்த பொழுது தலையில் காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார். சுவரில் இருந்த ரத்த துளிகளை கொண்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதி சாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு ரவுடி முரளி கிருஷ்ணனை கைது செய்தனர்.
குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைதாகி 15 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த முரளி கிருஷ்ணன் கஞ்சா போதையில் இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





