சாலையை கடக்க முயன்ற மாணவி மீது பைக் மோதி விபத்து..!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே சாலையை கடக்க முயன்ற 9 வயது பள்ளி மாணவி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மாணவி பாத்திமா பள்ளி வேனுக்காக சாலையின் மறுபுறம் காத்திருந்தார். அவர் வேகமாக சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது எதிர் திசையில் வந்த பைக் மோதியதில் மாணவி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





