--- --:--:-- --

திருப்பூரில் தடை செய்யப்பட்ட 123.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

11

திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடி கம்பம் இரண்டாவது ரயில்வே கேட் செல்லும் சாலையில் உள்ள பெட்டிக்கடையின் பின்புறம் உள்ள ஒரு சிறிய அறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் சோதனை செய்தனர்.

 

சோதனையில்  சிவா(54) என்பவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் இருந்து 123.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

 

சிவா குறித்த ரகசிய தகவல் சேகரித்து சோதனை செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதன்மேல் தக்க நடவடிக்கை எடுத்த கொங்கு நகர காவல் உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் செந்தில்முருகன், வடக்கு காவல்நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் நல்லதம்பி, அனுப்பர்பாளையம் காவல்நிலைய நுண்ணறிவு பிரிவு காவலர் அன்பரசன் ஆகியோரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon