போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த பெண்கள்..!
மகளிர் சுய உதவி குழு நடத்தி வந்த பெண் குழு உறுப்பினர்கள் பெயரில் சுமார் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக திருப்பூர் மாவட்டம் சேவூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சேவூர் அடுத்த தசரா பாளையத்தை சேர்ந்தவர் துளசி மணி. மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தி வரும் இவர் குழு உறுப்பினர்களின் பெயரில் 12 லட்சம் கடன் வங்கியில் கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது.
பணத்தை குழு உறுப்பினர்களுக்கு கொடுக்காமல் துளசி மணியே வைத்துக்கொண்டு மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பணத்திற்கான தவணை கட்ட சொல்லி வங்கி ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியில் விவகாரம் அம்பலமான நிலையில் குழு உறுப்பினர்கள் ஒன்று திரண்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





