ஈரோட்டில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்..!
தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க மக்களின் குறைகளை கோரிக்கைகளாக பெற்று உடனடியாக தீர்வு காணும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகமானது ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பூனாட்சி, முகாசிபுதூர், அட்டவணைபுதூர், ஒட்டபாளையம் ஆகிய ஊராட்சி மக்களுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நால்ரோடு KMT திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமினை அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சரவணன் அவர்கள் அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு மணி( எ) ஈஸ்வரன் , மாவட்ட துணை செயலாளர் திரு எம்பி அறிவானந்தம் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.
இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அரசு துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




