--- --:--:-- --

திருவாடானை பெரிய கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது..!

12

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா,     திருவாடானையில் அருள்மிகு ஸ்ரீ சினேகவல்லி அம்மன் உடனாய ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடிப்பூர திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று தேரோட்டம் நடந்தது.

 

இந்த திருவிழாவானது கடந்த ஜூலை 29ம் தேதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 9 ம் நாள் திருவிழாவில் அருள்மிகு சினே வல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளிய நிலையில் தேரை நான்கு வீதிகள் வழியாக ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் சென்ற பிறகு அந்த கடத்தினை பக்தர்கள் தொட்டு வணங்கினர். பின்னர் தேர் நிலைக்கு வந்தடைந்து. அதனை தொடர்ந்து அம்பாள் தேரிலிருந்து இறக்கி தேர்வந்த வீதி வழியாக சென்று தடம் பார்க்கும் நிகழ்வு நடந்து பின் அம்பாள் கோவிலை வந்தடைந்தார்.

 

வருகிற ஆகஸ்ட் 9 ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
அதற்கடுத்தநாள் தீர்த்தவாரி நிகழ்வுடன் ஆடிபூரத்  திருவிழா நிறைவுபெறும் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon