--- --:--:-- --

தனியார் உணவகத்தில் திடீர் தீ விபத்து.. ஒரு மணி நேரம் போராடி தீயணைக்கப்பட்டது..!

3

ஈரோட்டில் பிரபல தனியார் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கோவிந்த் என்பவருக்கு சொந்தமான தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகம் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்தபோது நேற்றிரவு திடீரென உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

 

இதனால் அச்சமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக உணவகத்தில் இருந்து வெளியேறினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon