இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது.
அதேபோல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.நேற்றும் ரெட் அலெர்ட், ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரியில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




