உணவுகளில் இதை கலக்கக்கூடாது.. மீறினால் 7 ஆண்டு சிறை.. ரூ.10 லட்சம் அபராதம்..!
கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்மையில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 39 உணவு மாதிரிகளை சோதித்ததாகவும் அதில் எட்டு மாதிரிகளில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் செயற்கை பொருள் கலக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.
செயற்கை நிறமூட்டிகள் கலந்த உணவு உட்கொள்ளும் பொழுது புற்றுநோய் உட்பட பல மோசமான உடல்நல பாதிப்புகள் வரலாம் என தெரிவித்தார்.
எனவே சிக்கன், மீன், வெஜிடேரியன் கபாப் உணவுகளில் இனி செயற்கை நிறமூட்டி சேர்க்க தடை விதிக்கப்படுவதாகவும் மீறி சேர்ப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





