அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலையோரம் நடந்து சென்றவரின் மீது மோதி விபத்து..!
புதுச்சேரியில் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலையோரம் நடந்து சென்றவர் மீது பின் பக்கமாக மோதி கீழே தள்ளியதுடன் அருகில் இருந்த கடையில் பானி பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பதியினர் மீது மோதியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்துக்கு ஏற்படுத்திய இளைஞர் சஞ்சீவ் உட்பட நான்கு பேரும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞர் மது போதையில் வாகனம் ஓட்டினாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





