தொண்டி பகுதியில் பைக் திருடிய சிறுவன உள்பட இருவர் கைது..கையில் அறிவாளுடன் திரும் வீடியோ..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கடந்த வருடம் நள்ளிரவில் கையில் அரிவாளுடன் மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர்.
இந்த வழக்கு தொண்டி காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பற்றிய வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தேவிப்பட்டிணம் முட்டைக்காரத் தெருவைத் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் மகன் அம்ஜத்தான் (19) இதே பகுதியைச் சேர்ந்த நாகூர்கனி மகன் சீனுசமீர் (16) இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பைக் திருட்டில் ஈடுபட்ட இருண்டு பேரில் ஒருவன் சிறுவன் என்பது குறிப்பிடதக்கது. மேலும் வேறு வழக்குகள் ஏதும் சம்பந்தப்பட்டிருக்கிறான்களா என்ற விசாரணையை காவல் துறையினர் நடத்தி வருகிறார்கள்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




