--- --:--:-- --

நடுவானிலிருந்து கீழே சரிந்த கொரிய விமானம்..!

3

கொரியன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கீழே சரிந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

 

கொரியன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தைவானில் உள்ள டைசாங் விமான நிலையத்திற்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி புறப்பட்டது.

 

விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் விமானத்தில் காற்றோட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் 15 நிமிடங்கள் 26 ஆயிரத்து 900 அடி கீழே சரிந்தது. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கீழே சரிந்ததால் பயணிகள் அலறினார்.

 

இதையடுத்து விமானம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நிறுவனம் சார்பில் பயணிகளிடம் மன்னிப்பு கோரப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon