--- --:--:-- --

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை!

download (1)

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பிற்பகல் முதல் கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. இந்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இதேபோல் நாகப்பட்டினம், கடலூர், அருப்புக்கோட்டை, விருதுநகர், திண்டிவனம் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon