--- --:--:-- --

கெஞ்சிய ரசிகர், கண்டுகொள்ளாமல் சென்ற டாப்ஸி..!

2

தெலுங்கு படத்தில் நடித்து வந்த நடிகை டாப்ஸி, தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார்.

 

இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இவர் வந்தான் வென்றான், வை ராஜா வை, ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் டாப்ஸி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் காரில் ஏறுவதற்காக வந்தார். அப்போது, ரசிகர் ஒருவர் ஓடோடி சென்று டாப்ஸியிடம் ஒரே ஒரு செல்பி மேடம் என்று கெஞ்சினார். அதற்கு அவர், முடியாது என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon