சர்ச்சையில் சிக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்..!

யக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி வெளியானது. இப்படம் கேரளா மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது. இப்படத்தில் சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி நடித்திருப்பார்.

 

இவரது நடிப்பு மிக பெரிய அளவில் பேசப்பட்டது. சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதில் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், ஆவேசம் படத்தில் இடம் பெற்ற ஜடா என்கிற பாடலை பாடினார்.

 

அப்போது கீழ் இருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். உற்சாகமிகுதியில் சில கெட்ட மோசமான பேசியுள்ளார். இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.