திருவாடானை சமத்துவபுரத்தில் அதிகாரிகள் துணையோடு தரமற்ற வீடுகள்..பயனாகளிடம் ஒப்படைப்பதற்கு முன்பே சேதம்..!
ராமநாதபுரம் மாட்டம், திருவாடானையில் கடந்த திமுக ஆட்சியில் சமத்தவபுரம் அமைத்து அங்கு அரசால் 100 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதில் மக்கள் குடியிருந்து வந்த நிலையில் வீடு சேதம் அடைந்தது.
அதன் பிறகு தற்போது ஆளும் அரசு பழைய வீடுகளை இடித்து அப்புறப்ப்படுத்தி விட்டு புதிய வீடுகள் கட்ட ஒரு வீட்டிற்கு ரூ 4 லட்சத்து 80 ஆயிரம் என நிதி ஒதுக்கி 80 க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து கட்டும் பணி கடந்த பல மாதங்களாக வருகிறது. ஆனால் இதுவரை பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்ப்படவில்லை.

வீடுகள் கட்டும் போது ஒவ்வோர் நிலையிலும் அதிகரிகள் முன்னிலையில் தான் வேலைகள் நடந்துள்ளது. அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பணிகள் ஏதோ பிரதிபலனின் காரணமாக வீடுகள் தரமற்ற முறையில கட்டப்பட்டுள்ளது.
வீடுகள் தரமற்ற முறையில் கட்டுவதன் விளைவாக வீட்டின் சுவற்றில் பூச்சு கையால் தொட்டாலே உதிர்கிறது..மேலும் சமையல் அறையில் எவ்வித உப வேலைபாடுகள் இல்லாததால் சமைத்து சாப்பிட முடியாத அவல நிலை இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்தனர். வீட்டிற்குள் ஒரு சிலாப் அமைக்க ரூபாய் 12, ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

கழிவறைக்கு அமைக்கப்படும் குழிகளுக்கு நான்கு கேணி உரை இறக்கி அமைக்கின்றனர். அது கூட தரமற்று சேதமடைந்த நிலையிலும் அமைக்கின்றனர். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளே நன்றாக தான் இருந்தது என்றும் அதை இடித்து விட்டு தற்போது தரமற்ற வீடுகள் கட்டியுள்ளனர்.
இதில் குடியிருக்கும் ஒவ்வோர் நாளும் உயிருக்கு ஆபத்து என்றும் கவலை தெரிவித்தனர். மேலும் இங்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்காக நீர் வழித்தடங்களில் இருந்த பழைய தூம்புகளை அகற்றிவிட்டு புதிதாக தூம்புகள் அமைப்பதாக கூறி அதனை அமைக்காமல் தார்சாலை அமைத்து விட்டனர்.
இதனால் மழை நாட்களில் தண்ணீர் சேர்த்து தேங்கி நிற்கும் நிலையில் சுகாதாரா கேடு ஏற்படவும் வாய்பு உள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துப் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மாறாக புகார் கொடுக்கும் பயனாளிகளுக்கு இன்னும் வீடு முழுமையாக கட்டப்படாமல் தாமதப் படுத்துகின்றனர்.
வீட்டு வேலையின் போது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை கொடுக்க மின் ஊழியர் லஞ்சம் கேட்பதாகவும் தெரிவித்தனர். இதெற்கெல்லாம் அதிகாரிகள்தான் காரணம் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




