--- --:--:-- --

திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து  துவக்கி வைத்த நீதிபதி..!

3

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் நீதிபதி பிரசாத் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை தொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

இந்த வாகனத்தின் மூலம் கிராமம் கிராமமாக சென்று சட்ட விழிப்புணர்வு அறிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள், பிரச்சனைகள், குற்றவியல் வழக்குகள், ஜாமினில் வெளியில் வருதல் சம்பந்தமாகவும் வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் அல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது அதாவது சமரச தீர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை, பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்டம் பற்றி தெரிந்து கொள்ளுதல் முதியவர்கள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற வழக்கு தொடர்வது போன்ற பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சட்ட ஆலோசனை இலவசமாக பெற 1800 425 2441 என்ற இலவச எண்ணை அழைத்து சட்ட ஆலோசனை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இது இந்த சட்ட விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் கிராமங்கள் தோறும் துண்டு பிரசுரங்களை நேரில் சென்று  வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon