அமித்ஷா என்னிடம் இதைதான் கூறினார்” – தமிழிசை கொடுத்த புதிய விளக்கம்
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழிசையுடன் காரசாரமாக விவாதித்தது பேசுபொருளாகியுள்ள நிலையில் தமிழிசை அதற்கு விளக்கமளித்துள்ளார்.
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார். இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷா, தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசையை கண்டித்தார். இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என முழுமையாகத் தெரியவராத நிலையில் இது தொடர்பான காட்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது.இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தமிழிசை தற்போது முழு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தொகுதி மற்றும் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அமித்ஷா எனக்கு அறிவுரை கூறினார். மேலும் தேர்தலுக்கு பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கேட்டறியவே அமித்ஷா என்னை அழைத்தார். போதிய நேரம் இல்லாததால் அரசியல் பணிகளை மேற்கொள்ள அமித்ஷா சுருக்கமாக என்னிடம் அறிவுறுத்தினார்.” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




