--- --:--:-- --

வைகோவுக்கு எலும்பு முறிவு… மருத்துவமனையில் சிகிச்சை..!

1

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேலின் இல்லத் திருமண விழா இன்று நாகர்கோவில் அடுத்த இடலாக்குடியில் நடைபெற்றது.

 

இதில் மதிமுக பொது செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. இந்நிலையில், அவரது மகன் துரை வைகோ மட்டும் நாகர்கோவிலில் நடைப்பெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 

பின்னர் அவர் பேசுகையில், “வைகோவுக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேலின் இல்ல திருமண விழாவில் எனது தந்தை மதிமுக பொதுச் செயலாளர். வைகோ கலந்துகொள்வதாக இருந்தது. அதற்காக நேற்று அவர் தயாராகியபோது கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் திடீரென வழுக்கி விழுந்தார்.

 

இதில் தோள்பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டது. உடனடியாக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு சிகிச்சைக்காக அவரை அனுப்பி வைத்தோம். இந்த காரணத்தினால்தான் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை” என பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon