--- --:--:-- --

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் மழை..!

2

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நேற்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று மாலை 05:30 மணி அளவில் ‘ரீமல்’ புயலாக வலுப்பெற்று, இன்று காலை 05:30 மணி அளவில் “தீவிர புயலாக” வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.இது இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்-சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

 

இது மேலும், வடக்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு, வங்க தேச-கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம்-சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon