வீட்டின் ஏசிக்குள் பதுங்கி இருந்த பாம்பு..!
லால்குடியில் ஏசி மெஷினுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி வஉசி நகரை சேர்ந்தவர் ரோஸி. இவரது வீட்டு ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஏசி மெஷினில் பதுங்கிக் கொண்டது.
இதை அறிந்த ரோஸி லால்குடித்து தீயணைப்புத் துறைக்கு தகவல்கள் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏசி மெஷினில் பதுங்கி இருந்த நான்கடி நீளக்காட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





