ரசாயனத்தால் பழுக்க வைத்த ஒன்றரை டன் மாம்பழங்கள் அழிப்பு..!
வேலூரில் ரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைத்த ஒன்றரை லிட்டர் மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் கொடவட்டம் பகுதியில் மாங்காய் வண்டி செயல்பட்டு வருகிறது.
இங்கு மாம்பழங்களை மொத்தமாக விற்பனை செய்யும் ஏழு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இரசாயனங்களை கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பதாக வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த கடைகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 1 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





