ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ வெளியிட்ட செல்லூர் ராஜு
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ வெளியிட்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என கூறிய நிலையில் தற்போது செல்லூர் ராஜுவின் இந்த பதிவு கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையின் அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜு, தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உள்ளது. அதிமுக தேசிய அளவில் பாஜக கூட்டணியிலும், இந்தியா கூட்டணியிலும் இணையாமல் தனித்து களம் காண்கிறது.இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ வெளியிட்டிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.





