ஜூன் 4க்கு பிறகு காணாமல் போய்விடுவார்கள் : பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஊழலின் மையமாக விளங்குவதாகவும் அந்த மாநிலத்தின் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியவர் தொழிற்சாலைகள் முதல் அனைத்து உள்கட்டமைப்புகளையும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து அழித்துவிட்டதாகவும் அதனால் மேற்கு வங்கம் வளர்ச்சியில் பின்னோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கையில் பணம் அந்த கையில் வேலை என ஏலம் விட்டுவிட்டு கொள்ளையடிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இந்தியா கூட்டணியும் திதிரிணாமுல் காங்கிரசும் காலாவதியாகிவிட்டதாகவும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு முழுவதுமாக காணாமல் போய்விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.





