நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!
கேரளாவில் இருந்து கர்நாடகா சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கர்நாடக மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானம் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது. விமானத்தை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் உடனடியாக ஈடுபட்டனர். இதையடுத்து திருச்சூரிலிருந்து மற்ற விமானத்தில் பயணிகள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





