கனமழை இடிந்து விழுந்த வீட்டின் ஸ்லாப்..பறிபோன சிறுமியின் உயிர்..!
நெல்லையில் கனமழை காரணமாக வீட்டின் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் நெல்லை டவுன் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வீட்டின் சுவர்கள் வலுவிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மகேந்திரனின் ஏழு வயது மகள் அகல்யா கதவை திறந்து வெளியே செல்ல முயன்றார்.
அப்பொழுது கதவின் மேற்பகுதியில் உள்ள எதிர்பாராத விதமாக அகல்யா மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





