--- --:--:-- --

நான்காயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!

3

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள நான்காயிரம் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

 

இந்த பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடைசியாக இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon