--- --:--:-- --

நள்ளிரவில் நடந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு..!

2

மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதி விபத்திற்கு உள்ளானது.

 

இதில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். ஒரு சிறுவன் மட்டும் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் கடலூர் மாவட்டம் மேலோட்டம்பாக்கம் பகுதியில் சேர்ந்த அப்துல் என்பவரது மனைவி அவரது இரு மகள்கள் மற்றும் காரின் ஓட்டுனர் என்பது தெரியவந்தது.

 

கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு திரும்பும் பொழுது அவர்கள் விபத்தில் சிக்கி இருப்பதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon