--- --:--:-- --

மின்னல் தாக்கியதில் ரயில்வே காவலர் உட்பட 2 பேர் உயிரிழப்பு..!

4

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்வதால் வெப்பம் தணிந்தது. தர்மபுரியில் மின்னல் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடையின் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சமீப நாட்களாக மழை பொழிவு இருந்து வருகிறது.

 

அதேபோல் தர்மபுரி நகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்ததால் கோடை வெப்பம் தணிந்தது.

 

நாகூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதால் ரயில்வே காவலர் ஒருவர் உயிரிழந்தார். சித்ரா என்பவர் பசும்பால் கறக்கும் பொழுது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். பசுவும் உயிரிழந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon