கடன் சுமையால் குடும்பமே எடுத்த சோக முடிவு..!
சென்னை மணலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு கிருஷ்ணப்பன் தெருவை சேர்ந்த ஜெகநாதன் – லோகேஸ்வரி தம்பதிக்கு காவியா என்ற பெண் குழந்தை உள்ளது. சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்து ஜெகநாதனுக்கு வியாபாரத்தில் போதிய வருவாய் இல்லாததால் வீடு கட்ட வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமலும் மேலும் பல்லடம் கடன் வாங்கியும் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜெகநாதன் தாய் தகப்பனுக்கு தகவல் அளித்துள்ளனர். உள்ளே திறந்து பார்த்த பொழுது மூன்று பேரும் சடலமாக கிடந்துள்ளனர். வீட்டில் இருந்து கைப்பற்றிய கடிதத்தை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





