பெண்ணின் மூக்கிற்குள் இருந்த நூற்றுக்கணக்கான புழுக்கள்..!
பெண்ணின் மூக்கிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றப்பட்ட சம்பவம், தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 59 வயதான பெண் கடந்த ஒரு வாரமாக அசௌகரியமாக உணர்ந்துள்ளார். மூக்கில் தூசி இருப்பதாக நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததால் அதிர்ச்சி அடைந்தவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது x-ray எடுத்து பார்த்தபொழுது பெண்ணின் மூக்கில் புழுக்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
59 வயதான அந்த பெண்ணின் மூக்கிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்பொழுது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





