சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!
சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்ய முயன்ற பொழுது அவர் தப்பியோட முயன்ற நிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
உப்பிலி மாவட்டத்தில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. உடனடியாக மருத்துவர்கள் போலீசருக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 19 வயதான சதாம் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. போலீசார் சதாமை போக்சோ சட்டத்தில் கைது செய்ய முயன்ற பொழுது போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி அவர் ஓட முயன்றார்.
காவலர்கள் இருவர் காயம் அடைந்த நிலையில் போலீசார் வேறு வழியின்றி சகாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியும் சதாமும் ஒருவரை ஒருவர் அறிந்திருப்பதையும் சதாம் ஜனவரி முதல் மே 3 வரை பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனிடையே குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடும் போராட்டம் நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





