--- --:--:-- --

மின்கம்பியை பிடித்த குழந்தை உயிரிழப்பு..!

6

காரைக்காலில் மின்சார கம்பியை பிடித்து இழுத்த ஒன்றரை வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. திருவாரூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் காரைக்காலை அடுத்த கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

 

பாட்டி வீட்டில் டேபிள் பின்விசிறி தரையில் கிடந்துள்ளது. அப்பொழுது ஒன்றரை வயது குழந்தையான யோகேஸ்வரன் மின்கம்பியை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.

 

அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை யோகேஸ்வரன் சத்தம் கேட்டு வந்த தாய் ராஜேஸ்வரி சுயநினைவின்றி கிடந்த குழந்தையை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon