--- --:--:-- --

கோவையில் பிரபல உணவகத்தில் வாங்கப்பட்ட உணவில் இரும்புக்கம்பி..!

4

கோவையில் பிரபல உணவகம் ஒன்றில் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட சிக்கனில் இரும்பு கம்பி இருந்தது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வரும் பெண் ஒருவர் பிரபல உணவகத்தில் நான்கு வகையான சிக்கன்களை உணவு டெலிவரி செய்யும் பிரபல செய்யும் மூலம் ஆர்டர் செய்துள்ளார்.

 

சிக்கன் ஒன்றில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இது குறித்து பெங்களூரில் பணிபுரிந்து வரும் தனது கணவர் சுதாகரிடம் தெரிவித்துள்ளார். பின் உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகத்தை சுதாகர் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். எனினும் அவர்கள் எந்த ஒரு பதிலும் முறையாக அளிக்காததால் இது குறித்து உணவு டெலிவரி செய்த நிறுவனத்தில் புகார் அளித்திருக்கிறார்.

 

அந்த நிறுவனத்தினர் அவர்களுக்கு உண்டான ஆர்டர் பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறியுள்ளனர். அதை ஏற்க மறுத்த சுதாகர் உணவில் இருந்த கம்பியை புகைப்படம் எடுத்ததோடு சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டு இருக்கிறார்.

 

தற்பொழுது அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் கொடுக்க முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon