--- --:--:-- --

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்து.. பறிபோன சிறுவனின் உயிர்..!

2

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 வயது சிறுவன் இறந்தார். படுகாயம் அடைந்த எட்டு பேர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னை வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழுவாக 16 பேர் மற்றும் 15 குழந்தைகள் என 31 பேர் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஏற்கனவே பதிவு செய்த சுற்றுலா வாகனம் மூலம் உதகையை சுற்றி பார்த்துவிட்டு மேட்டுப்பாளையம் சென்றுள்ளனர்.

 

இரவு 7 மணியளவில் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் அணை சென்ற பொழுது பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுலா வாகனம் விபத்திற்கு உள்ளானது. இதில் ஓட்டுநர் உட்பட 32 பேரும் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் விரைந்து வந்த காவல்துறையினர் ஒவ்வொருவராக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

துர்திர்ஷ்டவசமாக கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார் படுகாயம் அடைந்த ஆறு பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Right Menu Icon