--- --:--:-- --

ஊதிய உயர்வு கொடுக்காததால் மேனேஜர் முன் ஊழியர் செய்த தரமான சம்பவம்..!

6

ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து விலகியதை ஊழியர் ஒருவர் இசை குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அங்கீத் பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். தனது நண்பர்கள் மற்றும் இசை குழுவை அழைத்து அங்கு நிறுவனத்தின் மேலாளர் முன்பு வாசலில் மகிழ்ச்சியுடன் ஆடி பாடி கொண்டாடினார்.

 

எரிச்சல் அடைந்த நிறுவனத்தின் மேலாளர் அங்கீத் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon